MARC காட்சி

Back
அருள்மிகு மணிகண்டேசுவரர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு மணிகண்டேசுவரர் கோயில் -
246 : _ _ |a திருமால்புரம், திருமாற்பேறு, ஹரிச்சக்ரபுரம்
520 : _ _ |a இவ்வூர் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் செங்கற்பட்டு - அரக்கோணம் இருப்புபாதையில் திருமால்பூர் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் நடுவே மணிகண்டேசுவரர் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. தொண்டை நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 32 தலங்களில் பதினோராவதுத் தலமாக விளங்குகிறது. இவ்வூருக்கு அருகே சிறப்பு பெற்ற குருபகவானான தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ள கோவிந்தவாடி என்ற ஊர் உள்ளது. திருமால் இங்கு சிவபெருமானை வழிபட்டு அவ்வழிபாட்டின் பயனாக அப்பெருமானிடமிருந்து நற்பேறு பெற்றதால் இத்தலத்திற்குத் ‘திருமாற்பேறு’ என்ற பெயர் சூட்டப்பெற்றது என்றும், திருமால் இறைவனை வழிப்பட்டு பேறு பெற்றதலம், என்பதால் ‘மாற்பேறு’ என்னும் பெயர் பெற்றது என்றும், திருமால் வழிபட்டுச் சக்ராயுதம் பெற்ற தலமாதலின் இதற்கு ‘ஹரிச்சக்ரபுரம்’ என்றும் கல்வெட்டுகளில் ‘திருமாற்பேறு’ என்றும் தேவாரப் பதிகங்களில் ‘திருமாற்பேறு’ என்றும் வழங்கப்பட்டுள்ளதால் திருமால்பேறு பெற்ற புராண அடிப்படையிலேயே இவ்வூருக்கு ‘திருமாற்பேறு’ என்ற பெயர் வழங்கலாயிற்று எனக் கூறலாம்.
653 : _ _ |a மணிகண்டேஸ்வரர் கோயில், திருமால்பூர், திருமால்புரம், திருமாற்பேறு, அஞ்சனாட்சி, தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலம், திருமால்புரம், திருமால் சக்கரம் பெற்ற தலம், தமிழ்நாட்டு சிவாலயங்கள், வேலூர் மாவட்டக் கோயில்கள், சிவத்தலங்கள்
700 : _ _ |a American Institute of Indian Studies
905 : _ _ |a கி.பி.7-15ஆம் நூற்றாண்டு/ பல்லவர், சோழர், விசயநகர-நாயக்கர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். பல்லவர், சோழர் கலைப்பாணிகளைப் பெற்று விளங்குகிறது.
914 : _ _ |a 12.9544671
915 : _ _ |a 79.6747678
916 : _ _ |a மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர்
918 : _ _ |a அஞ்சனாட்சி அம்மை, கருணாம்பிகை
922 : _ _ |a வில்வம்
923 : _ _ |a சக்கர தீர்த்தம்
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a மாசிப் பெருவிழா, ஆடிப்பூரம், கார்த்திகை தீப விழா, ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கருடசேவை, புரட்டாசி நவராத்திரி, நால்வர் உற்சவம்
927 : _ _ |a திருமாற்பேறு கல்வெட்டில் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன் விளக்குக்காக 15 கழஞ்சு பொன்னும், சோதி விளக்கும் இறைவனுக்கு பால்அபிஷேகம் செய்வதற்காக பசுக்களும், சங்கிராந்தி காலங்களில் 108 கலசமாக நெய்யும், பாலும் கொடையாக கொடுத்து ஏற்பாடுகள் செய்ததை திருமாற்பேறு கல்வெட்டுகள் (268, 280, 285, 292 /1906) குறிப்பிடுகின்றன. திருமாற்பேறு கல்வெட்டு ஒன்றில் "கோ” நாட்டுக் கொடும்பாளுர் வீர சோழ இளங்கோ வேளாண் மகன் ஆதிச்சபிடாரன் என்பவன் கோவிந்தபாடியில் இருந்த மடம் ஒன்றுக்கு கொடைகள் கொடுத்திருக்கின்றான். (306/1906). மற்றொரு கல்வெட்டில் (294/1906) மும்முடி சோழ தேவியார் பஞ்சவன்மாதேவியார் என்பவர் நந்தா விளக்குகளைக் கொடை கொடுத்த செய்திகள் அறிய கிடைக்கின்றன. மற்றொரு கல்வெட்டில் அரிகுல கேசரியின் பெருந்தன அதிகாரி பல்லவரையன் 10 காசுகள் கொடுத்து இறையிலி நிலம் வழங்கிய செய்திகள் காணப்படுகிறது. பரகேசரி வர்மனுடைய கல்வெட்டு ஒன்று ஆதித்தியன் மீனவன் மூவேந்த வேளாணுடைய மனைவி கோயில் கண் ணப் பிராட் டி என்பவள் கோவிந்த பாடி இறைவனுக்கு அர்த்தஜாமத்தின் போது திருஅமுது படைக்க நிலம் கொடுத்துள்ளதைச் சொல்லுகிறது (320/1906). அமுது படியாக பழவரிசி, நெய், கறி அமுது, அடைக்காய் அமுது, வெற்றிலை முதலியவை படைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்காக இவன் 1,462 குழி நிலத்தை ஒரு பிராமண பெண்ணிடம் விலைக்குப் பெற்று கொடுத்துள்ளார். இதே கோவிந்தபாடியிலுள்ள இறைவனுக்கு மணவாளப்பெருமாள் என்ற தெய்வத்திற்கு, உச்சிகாலத்தின் போது அமுது படி(321/1906) படைப்பதற்காகவும், படைக்கப்பட்ட அந்த அமுதினை மடத்தில் பணி ஆற்றுகின்ற பிள்ளைகளுக்கு உணவாக கொடுப்பதற்காகவும், ஒரு பிராமணர் கொடைகள் கொடுத்துள்ளார். அரையன் பொன்னம்பலம் கூத்தனுடை கண்ணகதரையன் என்பவன் பல ஆபரணங்களுக்காக கொடுத்த தங்கம், பல மாற்றுகளில் இருந்தது. இந்தத் தங்கம் 137 கழஞ்சு கொண்டு இறைவனுக்கு ஒரு பரிகலனும், கனமும் செய்து கொடுக்கப்பட்டன. 460 கழஞ்சு வெள்ளியால் அட்டனை ஒன்றும், காக்கால் இரண்டினால் இந்த தனை ஒன்று செய்து கொடுக்கப்பட்டன. 180 பலம் செம்பினால் ஒரு கழுமியும் முகவை சொம்பும் செய்து கொடுக்கப்பட்டன. வெண்கலம் 122 பலம் எடையில் ‘4 1/2’ சான், (2 ½) உயரத்தில் 3 விளக்குகள் செய்து கொடுக்கப்பட்டன (272/1906) கரிக்கால் சங்குகள் தரவாகவும் செய்து கொடுக்கப்பட்டது. சம்புவராயருடைய அதிகாரிகளில் அரையன் நீரணிந்தான் என்பவன் திருமாற்பேறு இறைவனுக்கு 5 கழஞ்சு எடையில் பொற்பூ ஒன்றும், காரை ஒன்றும் செய்து கொடுத்துள்ளான். 48 கழஞ்சு எடையில் ஒரு வெள்ளி வட்டிலையும், 222 பலம் எடையில் 2 திருக்குத்து விளக்குகளையும் செய்து கொடுத்துள்ளான்.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a 1.கருவறையில் இலிங்கம் 2. நந்தி, 3. நடராசர் சன்னதி, 4. ஆறுமுகன் சன்னதி, 5. வல்லப விநாயகர், 6. விநாயகர், 7. நந்தி, 8. திருமால், 9. துவாரபாலகர்கள், 10. சூரிய மூர்த்தி, 11. சோளிஸ்வரர், 12. நால்வர் சன்னதி சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் 13. பஞ்சமி, பிராமி, கெளமாரி, வராகி, வைஷ்ணவி 14. மாகேஸ்வரி, 15. சோமாஸ்கந்தர் 16. பாலகணபதி, 17. உச்சிஷ்ட கணபதி 18. சிதம்பரேஸ்வரர், 19. கெஜலஷ்மி, 20. சுப்பிரமணி, 21. வீரபத்திரர், 22. பைரவர், 23. சந்திரன், 24. வலம்புரி விநாயகர், 25. தட்சிணாமூர்த்தி, 26. மகாவிஷ்ணு, 27. பிரம்மா, 28.. சண்டிகேஸ்வரர், 29. அட்டபுச துர்க்கை, 30. நந்திகேஸ்வரர், 31. நவக்கிரகம், 32. பெரிய நந்தி 33. விநாயகர் சன்னிதி 34. சுப்பிரமணியர் சன்னதி
930 : _ _ |a குபன் என்னும் அரசன் பொருட்டாக திருமால் ததீசி முனிவரின் மீது தமது சக்கராயுதத்தை ஏவினார். அது அவரது வஜ்ர உடலைத்தாக்க முடியாமல் வாய்மடிந்தது. அதனால் திருமால இத்தலத்தை அடைந்து அம்பிகை பூசித்த சிவலிங்கத்தை ஆயிரம் மலர்களால் நாள்தோறும் அர்ச்சித்து சக்கராயுதம் அருள வேண்டினார். சிவபெருமான் அவரது பக்தியை சோதிக்க வேண்டி ஒரு நாள் திருமால் கொணர்ந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்தருளினார். அர்ச்சிக்கும் போது ஒருமலர் குறைவதைக் கண்டு தனது கண்ணைப் பறித்து கண்மலரை இறைவன் திருவடியில் அர்ச்சித்தார். இறைவன் உளம் மகிழ்ந்து திருமால் முன் தோன்றி, தாமரை மலருக்காக உன் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால் உனக்கு தாமரை போலும் கண் கொடுத்தோம். அன்று முதல் திருமாலுக்கு ‘தாமரைக் கண்ணன்' என்னும் பெயர் எய்தியது. அருள் செய்து நீ வேண்டிய சக்கரத்தையும் அருளினோம் என்று காட்சி நல்கினார். அச்சக்கரத்தை பெற்றுக் கொண்ட திருமால் இருவரங்களைச் சிவபெருமானிடம் கோரினார். அவற்றுள் ஒன்று எவரொருவர் இக்கோயிலில் வழிபாடு ஆற்றுகிறாரோ அவருக்கு இம்மை மறுமைப் பயன்கள் அனைத்தும் சிவபெருமான் அளிக்க வேண்டும். மற்றொன்று இத்தலம் அன்று முதல் தம்மை நினைவு கூரும் வகையில் திருமாற்பேறு என்னும் பெயரில் விளங்க வேண்டும் என்பதாகும். இவ்விரு வரங்களையும் சிவபெருமான் மணமுவந்து அருளினார். இதை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்றில், ஒரு கையில் தாமரை மலரும், மறுகையில் ‘கண்’ ணும் கொண்டு நின்ற கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம்.
932 : _ _ |a கோபுரம் சுமார் 4 அடி உபபீடத்தின் மீது அமைந்துள்ளது. உபபீடத்தின் மீதுள்ள அதிட்டானப் பகுதி, ஜகதி முப்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது. கோயிலில் இன்று எஞ்சியுள்ள தொன்மையான கட்டிடப் பகுதிகளில் இதுவும் ஒன்று. திருமாற்பேறு மணிகண்டேஸ்வரர் கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராசர் சன்னதி, அம்மன் சன்னதி, நந்தி, பலிபீடம், பள்ளியறை, சோமாஸ்கந்தர் சன்னதி, உட்கோபுரம், இரண்டாம் திருச்சுற்று, மடைப்பள்ளி, வெஞ்சன அறை, வாகன மண்டபம், திருக்குளம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயிலில் விநாயகர், சுப்பிரமணியர், அஞ்சனையாட்சியம்மையார் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு உரிய சிற்றாலயங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. கருவறை சதுர வடிவமானது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a கோனார் கோயில், மாரியம்மன் கோயில், பொன்னி அம்மன் கோயில், திரௌபதி அம்மன் கோயில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், கமல விநாயகர் கோயில், செல்வ விநாயகர் கோயில், அலையடி விநாயகர் கோயில், கெங்கை அம்மன் கோயில், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்
935 : _ _ |a வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் செங்கற்பட்டு-அரக்கோணம் இருப்புப் பாதையில் திருமால்பூர் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரின் நடுவே மணிகண்டேசுவரர் கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a திருமால்பூர்
938 : _ _ |a திருமால்பூர், அரக்கோணம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000166
barcode : TVA_TEM_000166
book category : சைவம்
cover images TVA_TEM_000166/TVA_TEM_000166_திருமால்பூர்_மணிகண்டேசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000166/TVA_TEM_000166_திருமால்பூர்_மணிகண்டேசுவரர்-கோயில்-0001.jpg